Free clothe bags issued to kodaikanal tourists
and Eco awareness stickers are pasted
பழனி விவேகானந்தா சேவா டிரஸ்ட் சார்பில்
சுற்றுலா பயணிகளுக்கு துணிப்பைகள் வழங்கு பணி ...
பழனி விவேகானந்தா சேவா டிரஸ்ட் சார்பில் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு துணிப்பைகள் வழங்கும் பணி ஐந்தாவது ஆண்டாக நடைபெற்றது. பழனி வனச்சரகர் கணேஷ்ராம் கலந்து கொண்டு துணிப்பைகள் வழங்கி சுற்றுலாவாசிகளுக்கு வனத்தின் மேன்மையை எடுத்த கூறினார் . சுற்றுலாவாசிகள் கொண்டு சென்ற பிளாஸ்டிக் பைகளை பெற்றுக்கொண்டு 1000க்கும் மேற்பட்ட துணிப்பைகள் வழங்கப்பட்டன .
மேலும் பழனிமலை காட்டுயிர் பாதுகாப்பு குழுவின் சார்பாக வழங்கப்பட்ட வனவிலங்குகளுக்கு உணவளிக்க கூடாது, கொடைக்கானல் மலையில் காணப்படும் காட்டெருமை, ஆடு, மான் போன்ற விலங்குகளை பாதுகாப்பது, காட்டுத்தீயின் தீமைகள் போன்ற சுற்றுசூழல் விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் சுற்றுலா வாகனங்களில் ஒட்டப்பட்டன. பழனி வனசரகத்திற்கு உட்பட்ட கொடைக்கானல் சாலையில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க உள்ளதாகவும் வனச்சரகர் கணேஷ் ராம் தெரிவித்தார் . இயற்கையை காக்கும் இந்த பணியில் சேவா டிரஸ்ட் உறுப்பினர்கள், வனப்பாதுகாவலர் துரை உள்ளிட்ட வனத்துறையினர் பங்கேற்றனர்.