அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் இருந்த சுவாமி விவேகானந்தர் திருவுருவ சிலைக்கு நெய்க்காரப்பட்டி அரிமா சங்கம் மயில்சாமி சுப்புராஜ், பழனி அரிமா சங்க தலைவர் ராமோஜி , பெருமாள், மாயகிருஷ்ணன் பாலதண்டாயுதபாணி பக்தர்கள் பேரவை சேகர்ஜி , அண்ணாமலையார் நாயகி ட்ரஸ்ட் ஸ்ரீ குரு ராகவேந்திரா சுவாமி சேவா ட்ரஸ்ட் , ஸ்ரீ ரமண மந்திரம் சோமசுந்தரம் மகாகவி பாரதியார் தமிழ்சங்கம் மணி ஆகிய அமைப்புகளின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது . இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்தனர் .
வள்ளுவர் தியேட்டர் செந்தில் ஜெயம் கன்ஸ்ட்ரக்சன் சந்திர சேகர் ஜே ஆர் சி சின்ராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் .பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி முன்பு துவங்கிய பேரணி காந்தி மார்க்கட் வழியாக வாசவி மஹாலை சென்றடைந்தது . அங்கு பழனி வாசவி கிளப் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது . பின்பு அனைத்து மாணவர்களுக்கும் பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன . 1000 கும் மேற்பட்ட விவேகானந்தரின் சிந்தனை துளிகள் என்ற சிறு புத்தகம் வழங்கப்பட்டன