பாலாறு
அணை ஜீரோ பாய்ன்ட் அருகில் உள்ள மலை மீது இரண்டு பழங்குடியினர் குடும்பம்
வசிப்பது பற்றி கேள்விப்பட்டோம் . ஒரு வாரத்திற்கு முன்பு அங்கு சென்று
பார்த்த பிறகு மனம் வெதும்பி போனோம் .அவர்களின் வாழ்க்கை முறை அவலமானது .
ரேசன் அரிசியினை விலைக்கு வாங்கி ஒருவேளை மட்டும் உண்கின்றனர் . குடிநீரை
எடுத்துக்கொண்டு அவர்கள் ஏறி வரும் அந்த மலைமீது நாம் நின்றாலே தலை
சுற்றும் .
அவர்களுக்கு சில அடிப்படை வசதிகள் தேவையாக இருந்தது . எனவே
சென்ற ஞாயிற்றுகிழமை (4-10-2015) அவர்களுக்கு இரண்டு சோலார் டார்ச் லைட்களும் அவர்கள்
கூரை மழையில் ஒழுகாமல் இருப்பதற்கு தேவையானவற்றை கொடுத்து வந்தோம் .
\